கர்பிணி தாய்மார்கள் பரசிடமோல் பயன்படுத்துவதால் பிறக்கும் குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை நோர்வே நாட்டை சேர்ந்த ஒஸ்லோ பல்கலைகழகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 48 ஆயிரம் கர்பிணி தாய்மார்களை உள்வாங்கி மூன்று வருட காலத்திற்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ரத்னசிறி ஏ ஹெவாகே தெரிவித்தார்.
வைத்தியர்களின் சிபாரிசு இன்றி கர்பிணிகள் பரசிடமோல் பெற்றுக் கொள்வதை முற்றிலும் தவிர்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
