Monday, February 23, 2015

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்க கண்ணாடி கவசங்களை இடுவதற்கு தீர்மானம்

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிக்கு கண்ணாடி கவசங்களை இடுவதற்கு கலை மற்றும் கலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்கள் இடுவது தொடர்பில் ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலை நிறுவகத்தின் சீகிரிய செயற்றிட்ட முகாமையாளர் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சீகிரியா ஓவியங்களின் பாதுகாப்பு தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
சுற்றுலாப் பயணிகள் ஓவியங்களை சேதப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்களை இடுவதால் இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்த்துக் கொள்ளமுடியும் என மத்திய கலை நிறுவகத்தின் சீகிரிய செயற்றிட்ட முகாமையாளர் சந்தன வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Disqus Comments