Sunday, February 15, 2015

சாதாரண பயணிகள் விமானத்தில் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார் - மைத்திரி

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று இந்தியா நோக்கிப் பயணமானார். மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இந்தியா பயணமாகியுள்ளார்.

ஒரு ஜனாதிபதியாக எவ்வித விஷேட ஏற்பாடுகளும் இல்லாமலும், விஷேட விமானத்திலும் அல்லாமல் இன்று பகல் இந்தியா நோக்கிப் பயணிக்க இருந்த சாதாரண பயணிகள் U 195  என்ற இலங்கை விமான சேவைக்குரிய விமானத்திலேயே இவர் இன்று பயணமானார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர (இவர் இந்தியாவில் ஜனாதிபதி குழுவினருடன் இணைந்து கொள்வார்) டீ. எம். சுவாமிநாதன், ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதி செயலாளர் பீ. பி. அபேகோன் ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.



Disqus Comments