பாகிஸ்தானில் பள்ளிவாசலொன்றில் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியானதுடன் 45 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள இமாமியா பள்ளிவாசலில் கைக்குண்டுகள் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை மேலங்கிகள் சகிதம் வந்தே போராளிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தென் பாகிஸ்தானில் பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 61 பேருக்கும் அதிகமானோர் பலியான சம்பவத்துக்கு இரு வாரங்கள் கழித்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பிந்திய தாக்குதலின் போது 3 தாக்குதல்தாரிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு தற்கொலை குண்டுதாரி பள்ளிவாசலின் வராந்தாவில் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
மற்றைய தற்கொலைக்குண்டுதாரி பள்ளிவாசலின் பிரதான மண்டபத்துக்குள் நுழைந்த வேளை பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூன்றாவது தற்கொலைக்குண்டுதாரி பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.
