Friday, February 20, 2015

ISIS இலங்கையில் உள்ள தமிழ் இணையத்தை HACK செய்ய என்ன தேவை.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற பெயரில் தமது இணையத்தளம் இன்று காலை முடக்கப்பட்டிருந்ததாக, வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புதானா இதனை முடக்கியது? குட்டித் தீவொன்றின் தமிழ்மொழி இணையத்தளமொன்றை இப்படி முடக்குவதற்கு அவர்களுக்கு என்ன தேவை எனவும் முஸ்லிம்களிடத்தில் பரவலாக கேள்விகள் எழுந்துள்ளன.

இலங்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயங்குவதாக பேரினவாதிகளை உசுப்பேற்றிவிட்டு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியையும் துவேஷத்தையும் தூண்டி வளர்ப்பதும் இதன் நோக்கமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னணி உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Disqus Comments