முறையற்ற விதத்தில் பணம் அறவிடும் பாடசாலை அதிபர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.
அவ்வாறன அதிபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பெயர் பட்டியல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தும் வகையில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது. எனினும் சில அதிபர்கள் அந்த சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலுக்கு மாறாக செயற்பட்டுள்ளமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவிற்கு தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் பாடசாலைகளில் பணம் அறவிடப்படுகின்றமை குறித்து முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(nf)
