Friday, February 27, 2015

ODI வேகமான 50, 100 மற்றும் 150 ஓட்டங்களைப் பெற்ற வீரராக ஏ.பி டி விலியர்ஸ் பதிவானார்

உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ஓட்டங்களை பெற்றது .

தென்னாபிரிக்கா அணி சார்பில் அதிரடியாக விளையாடிய ஏ.பி டி விலியர்ஸ் 66 பந்துகளில் 162 ஓட்ட த்தைப் பெற்றார்.

இதில் 17, நான்கு ஓட்டங்களும் , 8 , ஆறு ஓட்டங்களும் அடங்குகிறது. இதன்போது பல சாதனைகளையும் படைத்தார் ஏ.பி டி விலியர்ஸ். ஒருநாள் போட்டியொன்றில் பெறப்பட்ட வேகமான 150 ஓட்டங்கள். (64 பந்துகள்) ஒருநாள் போட்டிகளில் வேகமான 50(31), 100(31) மற்றும் 150(64) ஓட்டங்களைப் பெற்ற வீர ராக ஏ.பி டி விலியர்ஸ் பதிவானார்.

தென்னாபிரிக்க அணி பெற்ற 408 ஓட்டமானது ஒருநாள் போடியொன்றில் அவுஸ்திரேலியாவில் அணியொன்று பெற்ற அதி கூடிய ஓட்டமாகும்.

52 பந்துகளில் ஏ.பி டி விலியர்ஸ் பெற்ற சதமானது அவுஸ்திரேலிய மண்ணில் பெறப்பட்ட அதிவேக சதமாக பதிவாகியது.

உலக க் கிண்ணத் தொடரில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டம்.



Disqus Comments