Tuesday, February 17, 2015

புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதித்தை நோக்கிய PPAF ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு

புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் (PPAF) அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்களை சந்திக்கும் திட்டத்திற்கு அமைய, 2015.02.16 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் அமைச்சர் ரவ்ப் ஹகீம் அவர்களை சந்தித்தது. இச் சந்திப்பின் போது PPAF-யின் செயற்பாடுகள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.


புத்தளம் தொகுதிக்கு சிறுபான்மை பாராளமன்ற பிரதிநிதியை பெற்று கொள்ளும் PPAF இன் முயற்சிக்கு தமது ஆதரவையும், இது விடயமாக எதிர்காலங்களில் தொடர்ந்து PPAF உடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்தார்.
சுமுகமான கலந்துரையாடலாக நடைபெற்ற இச் சந்திப்புக்கான ஒருங்கிணைப்பை புத்தளம் நகர சபை உறுப்பினர் MTN அமீன், மாவட்ட அமைப்பாளர் ஜவ்பர் மரிக்கார் மேற்கொண்டிருந்தார்கள்.




Disqus Comments