Sunday, March 1, 2015

100 நாட்களில் ரணிலை விரட்டி விடுவோம்: டிலான் பெரெரா

ரணில் விக்கிரமசிங்க இலவச இணைப்பு போல் பிரதமராகியிருக்கிறார்.அதுவும் அவருக்கு 100 நாட்களுக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதன் பின் அவரை விரட்டி விடுவோம் என்கிறார் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா.

100 நாள் வேலைத்திட்டத்தில் பிரதமராக அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறித்த காலத்திற்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையையும் ஒழித்து, தேர்தல் முறையையும் மாற்றவில்லையாயின் அவருக்கு ஸ்ரீலசுகட்சியின் ஒத்துழைப்பு கிடைக்கப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு எப்படியிருந்தாலும் அவருக்கு 100 நாள் தான் காலக்கெடு என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலுக்குத் தயாராகுமாறு நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியுறுப்பினர்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments