Tuesday, March 3, 2015

உலக கோடீஸ்வரா்கள் - பில்கேட்ஸ் இப்பட்டியலில் 16 ஆவது தடவையாக முதலிடம்

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. அதில், மைக்ரோசொப்டின் ஸ்தாபகர் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்துக்களின் நிகர மதிப்பு 79.2  பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

பில்கேட்ஸ் இப்பட்டியலில் 16 ஆவது தடவையாகவும் முதலிடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் இம்முறை 1826 பேரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இவர்களின் சொத்துக்களின் மொத்த தேறிய பெறுமதி 7.05 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இம்முறை  290  பேர் புதிதாக இந்த பட்டியலில்  இடம்பிடித்துள்ளனர். அவர்களில் 71 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த பட்டியலில், 90 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.  இதில் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இப்பட்டியலில் இரண்டாவது இட த்தில் மெக்சிகோவின் கார்லோஸ் சிலிம் உள்ளதுடன் 3 ஆவது இட த்தில் அமெரிக்காவின் வொரன் புபட் உள்ளார்.
இப்பட்டியலில் 5 இடங்கள் முன்னேறி 16 ஆவது இட த்தில் பேஸ்புக் நிறுவன ஸ்தாபகர் மார்க் ஸக்கர்பேர்க் உள்ளார்.  இதேபோல் குறைந்த வயது பில்லியனராக 'ஸ்னெப் செட்' உருவாக்குனர் எவன் ஸ்பிஜெல் இடம்பெற்றுள்ளதுடன் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.  

மேலும் இப்பட்டியலில் 40 வயதுக்கு குறைவான 46 பேர் இடம்பெற்றுள்ளமையானது இளம் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை சுட்டிக்காட்டுகின்றது

இதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8வது வருடமாக முதலிடத்தில் உள்ளார்.  அவரது சொத்துகளின் நிகர மதிப்பு 21 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அவர் உலக அளவில் ஒரு இடம் முன்னேறி 39வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அளவில், அவருக்கு அடுத்த இடத்தில், திலீப் சாங்வி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர்.

போர்ப்ஸ் 2015 சஞ்சிகையில் முதல் பத்து இடங்களைப் பிடித்த பெரும் பணக்காரர்கள்
1. Bill Gates $79.2bn (Microsoft)
2. Carlos Slim Helu $77.1bn (Phones and construction in Mexico)
3. Warren Buffett $72.7bn (Global investor)
4. Amancio Ortega $64.5bn (Zara and other fashion chains)
5. Larry Ellison $54.3bn (Oracle data storage technology)
6. Charles Koch $42.9bn (Industrialist)
7. David Koch $42.9bn (Industrialist)
8. Christy Walton $41.7bn (Walmart retail giant)
9. Jim Walton $40.6bn (Walmart retail giant)
10. Liliane Bettencourt $40.1bn (L'Oreal cosmetics firm)
Disqus Comments