37 வயது தாயும், 20 வயது மகளும் ஒரே தினத்தில் சில நிமிட இடைவெளியில் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்ஜெலா பட்ரம் என்ற தாயும் தெரனிஷா பில்லப்ஸ் என்ற மகளுமே இவ்வாறு ஒரே தினத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.
தம்பா பொது மருத்துவமனையில் அஞ்ஜெலா பெண் குழந்தையை பிரசவித்து 34 நிமிடங்களில் தெரனிஷா ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
அஞ்ஜெலாவின் குழந்தைக்கு ராய எனவும் தெரனிஷாவின் குழந்தைக்கு ஜெரி மிசோட் எனவும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
தமது பிரசவங்கள் குறைந்த நாட்கள் வித்தியாசத்தில் இடம்பெறவுள்ளதை முன்கூட்டியே அறிந்திருந்த போதும், ஒரே தினத்தில் சில நிமிட வித்தியாசத்தில் தாம் குழந்தைகளை பிரசவிக்கவுள்ளோம் என எதிர்பார்த்திருக்கவில்லை என அஞ்ஜெலாவும் தெரனிஷாவும் தெரிவித்துள்ளனர்.அஞ்ஜெலாவுக்கு தெரனிஷாவை உள்ளடக்கி ஏற்கனவே 4 பிள்ளைகள் உள்ளனர்.
