Wednesday, March 11, 2015

'வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம்' சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது விளம்பரம்


இந்தோனேசியாவில் வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம் என்ற விளம்பரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளது.

வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் நடத்து நிறுவனங்கள் பரிசு பொருட்கள் வழங்குவது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகும். ஆனால் வினோதமாக மனைவி இலவசம் என்ற பெயரில் விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் இந்தோனேசியாவில் இருந்துதான் வெளியாகியுள்ளது. “அரிய வாய்ப்பு வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம்” என்ற பெயரில் வெளியாகி இந்தவிளம்பரம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது. இந்தோனேசியா இணையத்தில் வெளியாகிய விளம்பரத்தில் “நீங்கள் எப்போது இந்த வீட்டை வங்குகிறீர்களோ, அப்போது பெண் உரிமையாளரை திருமணம் செய்யதுக் கொள்ள முடியுமா என்று கேட்க முடியும்” என்று வெளியாகி உள்ளது. 

விளம்பரம் அருகே 40 வயது வீட்டு பெண் உரிமையாளரான லீனா காரில் சாய்ந்த வண்ணம் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பல்வேறு வசதிகளுடன் இந்த வீடு உள்ளது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகனம் நிறுத்துமிடம் மற்றும் சிறிய மீன்குளம் ஆகிய வசதிகள் வீட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளம்பரத்தில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளது. ஜாவா தீவில் உள்ள வீட்டின் மார்க்கெட் விலை 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரையில் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்செய்தி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீட்டை விற்பனை செய்தாலும், தொடர்ந்து உரிமையாளராக நீடிக்கவே லீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் இணையதள தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், லீனாவை செய்தியாளர்கள் அனுகினர். செய்தியாளர்களிடம் பேசிய லீனா பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து உள்ளனர். போலீசாரும் வந்து விசாரித்தனர். இது மிகவும் முக்கியமான விவகாரம் என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்களிடம் இது என்னுடைய ஐடியா கிடையாது என்று விவரித்தேன் என்று லீனா கூறினார். 

இரண்டு குழந்தைகளுக்கு தாயான லீனா பேசுகையில், வீட்டை விற்பனை செய்வதற்கு ஆட்களை கண்டுபிடிக்கவே என்னுடைய நண்பரிடம் உதவி கேட்டேன். கணவர் தொடர்பாகவும் பேசினேன். குறிப்பிட்ட மக்களிடம் இந்த தகவலை அவர் தெரிவிப்பார் என்றே அவரிடம் கூறினேன். இணையதளங்களில் எல்லாம் நான் பதிவு செய்ய கூறவில்லை. வீடு வாங்க விருப்பம் உள்ளவர்கள் திருமணம் ஆகாதவர், மனைவியை இழந்தவர்கள் மற்றும் மனைவியை தேடுபவர்கள் என்ற பிரிவில் இருந்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். நானும் விதவை என்பதால் என்னை அவர் அறிந்துக் கொள்ள முடியும் அதனால் தான் கூறினேன் என்று தெரிவித்து உள்ளார்.
Disqus Comments