Tuesday, March 10, 2015

ஐக்கிய இராச்சியம் (துபாய்)யில் இலங்கை பெண்ணுக்கு 3 வருட சிறை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் தண்டனை காலம் முடிந்த பின் பெண்ணை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொல்லப்பட்ட குழந்தையின் உறவினர்களுக்கு நட்டஈடு (blood money) வழங்குமாறு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பிறந்த குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் திணித்து குப்பை பெட்டியில் வீசியதாக பெண்ணின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Disqus Comments