(அக்கரைபத்து மைந்தன் என்னும் முகநூலில் இருந்து)
மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் முடிவடையும் தறுவாறுயில் உள்ள நிலையில் பாராளுமன்றப் தேர்தல் பற்றி காய் நகர்த்தல்கள் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் புத்தளம் மாவட்டத்திலும் பலதரப்பட்ட வகையில் காய் நகர்த்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் நேற்றைய தினம் இணையதளங்களில் ஒரு செய்தியைப் காண முடியுமாக இருந்த்து. அது தான் ஆப்தீன் எஹியாவும், KA. பாயிஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவையில்லை என்பதாகும்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எப்படியாவது புத்தளம் மாவட்டத்தில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கில் தனித்துப் போட்டியிடப்போlட்டியிட இருப்பதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் தற்போது கட்சியில் இருப்பவர்கள் மட்டும் போட்டியிட வேண்டும். ஏற்கனவே கட்சியை விட்டுச் சென்றவர்கள் யாரும் மீண்டும் கட்சிக்கு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் புத்தளம் முஸ்லிம் காங்கிரல் மூத்த உறுப்பினாகள் இருப்பதாக அறிய முடிகின்றது. அதற்குக் காரணம் என்னவெனில் தற்போது கட்சியில் இருப்பவர்களை விட கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்களும், வாக்கு வங்கிகளில் அதிகம் பெற்றவர்கள். அவர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டால் தங்களுக்கு முன்னுரிமை இழக்கப்படும் என்ற சுயநலமேயன்றி வேறில்லை.
இவர்களின் பிடி வாத்த்திற்கு இன்னொரு முக்கிய காரணம் 2013ம் ஆண்டு வடமேல் மாகாண சபை தேர்தலில் ஆப்தீன் எஹியா போன்றவர்கள் இல்லாமல் தான் எமக்கு ஒரு ஆசனத்தைப் பெற முடிந்த்து அதே போன்று இந்த முறையும் தனித்து நின்றால் அவர்கள் இன்றி வெற்றி பெற முடியும் என்ற தப்பெண்ணமும் ஆகும்.
2013ம் ஆண்டு வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட வாக்கும் பற்றிய விபரத்தைப் பார்ப்போம்.
புத்தளம் தொகுதி 7905
சிலபாம் தொகுதி 893
நாத்தாண்டிய தொகுதி 1462
ஆனமடுவ தொகுதி 371
வெண்ணப்புவ தொகுதி 34
தபால் வாக்குகள் 65
மொத்தம் 10730
10730 வாக்குகளுக்குத் தான் 1 ஆசனம் கிடைக்கப் பெற்றது.
அதே மாவட்டம்,
அதே வாக்காளர்கள்.
அதே கட்சி
அதே வேட்பாளர்கள்
ஆகபெறப் போகும் வாக்குகள் 12000 – 18000க்கு இடையில் தான் மட்டுப் படுத்தப்படும். அதை விட அதிகமாக வாக்குகள் கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை. (காரணம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகள் பல தரப்பட்ட வகையில் பிரியக் காத்திருக்கின்றன. அது எப்படி என்பதை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் எழுதுவோம்.)
புத்தளம் மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மைக் கட்சி அல்லது சுயேட்சையாக நின்றாலும் சரி குறைந்தது 25000 வாக்குகள் சரி பெற வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் முஸ்லிம் காங்ரஸ் போராளிகள் அனைவரும் இணைந்து செயற்பட்டாலும் அந்த இலக்கை அடைவது அசாத்தியம்.
இன்னொரு முக்கியமாக விடயம் கடந்த தேர்தலில் கட்சி மாறி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி மாறி வேட்பாளராக களமிரங்கி ஆப்தீன் எஹியா மற்றும் றியாஸ் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பெற்ற வாக்குகளை(12000+) விட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அணைவரும் சேர்ந்து பெற்ற வாக்குகள்(10730) குறைவு என்று சொல்லித் தெரிய வேண்டிதில்லை.
ஆக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் ஆப்தீன் எஹியா, இன்றும் பாயிஸ் போன்ற வாக்கு வங்கிகள் நிறைந்த வேட்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
கட்சி மாறியவர்கள் என்று யாரையும் புறக்கணிக்க முடியாது. இன்றை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும் கட்சி மாறியவரே.
நன்றி : https://www.facebook.com/groups/1532258997024542/permalink/1538412129742562/
முக்கிய குறிப்பு - இந்தப்பதிவிற்கான மாற்றுப் பதிவுகள், விமா்சனங்கள் இருந்தால் எமது முகநூல் பக்கத்துக்கு அனுப்பி வையுங்கள். அதனை பிரசுரிக்க தயாராக இருக்கின்றோம். இப்படிக்கு ரெட்பானா நியூஸ் நிா்வாகம்.
முக்கிய குறிப்பு - இந்தப்பதிவிற்கான மாற்றுப் பதிவுகள், விமா்சனங்கள் இருந்தால் எமது முகநூல் பக்கத்துக்கு அனுப்பி வையுங்கள். அதனை பிரசுரிக்க தயாராக இருக்கின்றோம். இப்படிக்கு ரெட்பானா நியூஸ் நிா்வாகம்.
