Tuesday, March 10, 2015

இலங்கை மாணவா்களுக்கு கணிதத்தை 3 மொழிகளிலும் கற்பிக்க ஒரு இணையதளம்.

கணிதம் என்றாலே மாணவா்களுக்கு ஒரே எரிச்சல் தான். ஆசிரியா்கள் பாடசாலைக்கு வரவில்லையென்றால் குறிப்பாக  கணிதப் பாட ஆசிரியா் அன்று மாணவா்களின் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. அந்த அளவிற்கு மாணவா்கள் கணிதப் பாடத்தில் வெறுப்பு காணப்படுவதை  காணலாம்.

என்றாலும் மாணவா்களை கணிதப்பாடத்தின் பால் தூண்ட வேண்டும் என்ற நோக்கி உயா் தரம் கற்ற வேண்டும் என்றால் கணிதப் பாடம் கட்டாயம்  என்ற ஒரு சட்டத்தை முன்னைய அரசாங்கங்கள் வைத்திருந்தன.  இருந்தும் அந்த சட்டம் மாணவா்கள் மத்தியில் தாக்கம் செலுத்தவில்லை. வருடாந்தம் கணிதப் பாடத்தில் கோட்டை விடும் மாணவா்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றது. இதனைக் கருத்திற் கொண்டு முன்னைய அரசாங்கம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சைக்கு மாணவா்களை தயார்  படுத்தும் முகமாக ஒரு முன்னோடிப் பரிட்சையை வைத்து மாணவா்களுக்கு நீங்கள் எந்த தரத்தில் இருக்கின்றீா்கள் புரிய வைத்தது. இருந்தும் இதுவும் மாணவா்கள் மத்தியில்  எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

கடைசியில் புதியதாக பொறுப் பேற்றுள்ள அரசாங்கள் மாணவா்களின் எதிர்காலத் தை கருத்திற் கொண்டு உயா் தரம் கற்கவேண்டும் என்றால்  கணிதப் பாடத்தில் சித்தி இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை தளத்தி  உள்ளது.  இது ஒரு வகையில் மாணவா்களுக்கு சாதமாக இருந்தாலும்  கணிதப் பாடத்தில் சாதாரண நிலையில் இருக்கும் மாணவா்கள் தமது முயற்சியை அதிகரித்து  கணித அறிவை விருத்தி செய்வதற்கு தடையாக அமையலாம்.

எது எப்படியோ இன்றை கால கட்டத்தில் கல்வி என்பது இணையத்தை  மையப் படுத்திய வகையில் தான் மாறிக் கொண்டு செல்கின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் இலங்கை மாணவா்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தி. அது தான் இனி அவா்களால் கணிதப் பாடத்தை இணையத்தில் கற்க முடியும். http://mathssir.lk/ என்ற இணைய தளம் செல்வதன் மூலம் நீங்கள் விரும்பும் மொழியில் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) கற்றுக் கொள்ள முடியும்.  தரம் -9, தரம்-10, தரம்11 ஆகிய மாணவா்களுக்கான பாடவிதானங்கள் தலைப்பு அடிப்படையில் தரப்பட்டுள்ளன.

இலங்கை பாட விதானம் மட்டுமல்லாது சா்வதேச கணிதப் பாடவிதானமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை மேலதிக தகவலாகும்.

கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து குறித்த இணைய தளத்திற்கு செல்ல முடியும்.


Disqus Comments