Tuesday, March 10, 2015

மூன்று நாட்களில் திருமணம் முடிக்க தயாரான இளைஞன் சுட்டுக்கொலை

(எம். எஸ். பாஹிம்) இன்னும் மூன்று நாட்களில் திருமணம் முடிக்க இருந்த இளைஞரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்றுக்காலை ஹிக்கடுவ, கோனபீனுவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதியாக பணியாற்றிய 31 வயதான இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.
Disqus Comments