இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம்.
2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்.
3.இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம்.
4.ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகியனவே கைச்சாத்திடப்பட்டன.
