Sunday, March 22, 2015

எதிர்கால கற்பிட்டியை மையமாக கொண்டு Alliance Of Community Welfare என்ற அமைப்பு உதயம்...

சமூக நலன் குறித்து சிந்திக்கும் சமூகம் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதுதான் யதார்த்தம். அந்த வகையில்  கற்பிட்டி பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக பல குழுக்களும் தனி மனிதர்களும் பெரியபள்ளி,உலமாகள் குழுபிரதேச அரசியல் தலைமைகள்இளைஞர் அணிகள்இஸ்லாமிய இயக்கங்கள் என்பனவும் முயற்சித்து வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்!
இவர்களின் முயற்சிகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அனைவரின் இறுதி இலக்கு (Ultimate Goal) கற்பிட்டி பிரதேசத்தின் தனி மனிதபௌதிகஆன்மிக அபிவிருத்தியாகும் என்பதை இவர்களின் சமூக பங்களிப்புக்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.
இவ் அமைப்புக்கள்/ நிறுவனங்கள் அனைத்தின் இலக்கு ஒன்றாக இருப்பினும் திட்டமிடல்கள்,செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்பு என்பன ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.
இதனடிப்படையில் கற்பிட்டி பிரதேசத்தின் தனி மனிதபௌதிகஆன்மிக அபிவிருத்தியை இலக்காக கொண்டு இயங்கும் அனைத்து அமைப்புகக்களையும் அழைத்து எந்தவொரு தனிமனிதரின் அல்லது நிறுவனத்தின் சுதந்திரத்தை பாதிக்காத விதத்தில் ஒருமுகப்படுத்தப்படுத்திஇன்னும் சிறப்பாக செயற்பாடுகளை விரிவுபடுத்தி செயற்படும் நோக்குடன், கற்பிட்டி பிரதேசத்தின்கல்வி அபிவிருத்தியில் மட்டும் அக்கறை காட்டி வந்த “Education Development Association – Kalpitiya,Since 2005” என்ற அமைப்பு காலத்தின் தேவையை உணர்ந்து Alliance Of Community Welfare என்ற புது தோற்றத்துடன் தமது செயற்பாடுகளை விரிவாக்க முன்வந்துள்ளது.
Education Development Association – Kalpitiya, Since 2005” அமைப்பின் பத்தாவது வருட பூர்த்திக்கான பொதுக்கூட்டத்தில் (ஜனவரியில் நடைபெற்றது) Alliance Of Community Welfare என்ற அமைப்பு தொடர்பான செயற்திட்டம் முன்மொழியப்பட்டு அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வமைப்பின் தலைவராக சட்டத்தரணி M.R.M சபீஸ் அவர்கள் தொடர்ந்து இயங்குவதோடு அதன் பொதுச்செயலாளராக நிதி கட்டுப்படளர் (FC) M.F.M ரியாஸ் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார், இதன் செயற்பாடு உறுப்பினர்களாக பொறியிலாளர் K.M.M அன்சப், பொறியிலாளர் M.J.M இல்பான், பொறியிலாளர் H.M ஹஷ்ரின், மருத்தவர் M.M.M சஜீத், மருத்தவர் B.D.M நிஷ்பான் , சிரேஷ்ட கணக்காளர் M.N.M அன்பாஸ், சிரேஷ்ட கணக்காளர் M.S.M சம்ஷாம்கணக்காய்வாளர் A.M நஸ்ரின்,கணக்காளர் M.H.M முன்திர்முகாமை உதவியாளர் M.அஸ்வான், ஆகியோர் செயற்படுகின்றனர்.
-சமூக அமைப்புக்களின் சங்கமம்-
 எமது முகநூல் பக்கம்
Disqus Comments