Thursday, March 12, 2015

மஹிந்தவின் முள்ளாள் சோதிடா் மைத்திரிக்கும் சோதிட சேவை வழங்க தயாராம்.!!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட சோதிடரான சுமணதாஸ அபேகுணவர்த்தன, தமது சேவையை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொடர்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.
சுமணதாஸவின் சோதிட கணிப்பின்படியே மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
எனினும் தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு தோல்வி ஏற்படும் என்று கூறினால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனவேதான் தோல்வியடைவார் என்று தெரிந்தும் அவர் வெற்றிப்பெறுவார் என்று தாம் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாக சுமணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சுமணதாஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாய்ப்பு தருமாறு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
எனினும் அதற்கு ஜனாதிபதி பதில் அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments