Sunday, March 1, 2015

பிரதமர் பதவியால் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சி!


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் தேர்தல் முறை ஆகியன ஒரே நேரத்தில் திருத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் தேவை எனவும் அதுவே தனது நிலைப்பாடு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதே சுதந்திரக் கட்சியின் விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிமால் சிறிபால டி சில்வா, பிரதமர் பதவி என்ற கனவை அனைவரும் தமது மனங்களில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறினார். 

பிரதமர் பதவியை சிக்கலாக்கி கொண்டு சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


Disqus Comments