ரெட்பானா (கஜுவத்தை) முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்று மதில் திறப்பு நிகழ்வு நேற்று மாலை பாடசாலை அதிபா். ஜனாப் சன்ஹீம் அவா்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் அவா்களும் அதிதிகளாக முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினா் AHM. றியாஸ் அவா்களும், புத்தளம் பிரபல தொழில் அதிபா் அலிசப்ரி அவா்களும், வடமாகாண சபை உறுப்பினா் ரிப்கான் பத்தியுத்தீன், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினா் SHM. முஸம்மில் மற்றும் விருதோடை தொழில் அதிபா் MIM. நயீம் போன்றோரும் கலந்து கொண்டனா்.
கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயம் தற்போது 6ம் தரம் வரையான வகுப்புக்களையே கொண்டு காணப்படுகின்றது. மேற்படி பாடசாலையை 9ம் தரம் வரை தரம் உயா்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளை தான் செய்து தருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் வாக்களித்ததோடு புதிய கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
அத்தோடு இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள், பல்கலைக்கழகம், புலமைப்பரிசில் போன்றவற்றில் திறமைகாட்டி மாணவா்கள் உட்பட கிராமத்தில் அபிவிருத்திக்காக தங்களை அா்ப்பணம் செய்து கொண்டிருக்கும் அணைவருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்று மதில் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் விருதோடை தொழில் அதிபா் OMAGA CONSTRUCTION உரிமையாளா் MIM. நயீம் அவா்களின் அனுசரனையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.








