Thursday, March 12, 2015

முஸ்லிம்கள் மத்தியில் பரவி இருப்பது வியாதியா? அல்லது மனவியாதியா?

 அக்குரணை நஸ்லான் | நமது சமூகத்தின் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கும் ஒரு விடையம் தான் சிறு குழந்தைகள், பெண்கள், வயோதிபர், என்று எந்த வித்தியாசமும் இன்றி அனைவருக்கும் மாதத்திற்கு ஒரு முறையாவது நோய் வருவதும் அதற்கு மருந்து என்ற பெயரில் மணிக்கணக்கில் தனியார் மருந்தகங்களில் காத்திருப்பதும் இருக்கும் பணத்தை எல்லாம் டாக்டரிடமும், பார்மசிகளுக்கும் வாரி இறைப்பதும், வாங்கிய மருந்தை கூட அருந்தாமல் தூக்கி எறிவதும் வாடிக்கையான ஒன்றாக இருக்கின்றது இதற்கு என்னதான் காரணம் என்று பார்த்தால் உணமையிலே நோய் தானா என்றால் ஆம் நோய் தான் ஆனால் உடலளவில் உள்ள நோய் கிடையாது இது ஒரு மனதளவில் உள்ள ஒரு நோய் தான்.

 ஒரு காலத்தில் எமது மூதாதைய பெண்கள் எந்த நோய்க்கு எந்த கை மருந்து செய்தால் குணமாகும் என்று அறிந்து வைத்திருந்தார்கள், தற்போதுள்ள பெண்களுக்கோ எந்த நோய்க்கு எந்த டாக்டர் சிறந்தவர் என்று அட்டவணை போடச் சொன்னாள் மிக நேர்த்தியாக போடுவார்கள், காரணம் எமது பெண்கள் மத்தியில் மருந்து எடுப்பது ஒரு பொழுதுபோக்காக மாறி விட்டது மிகவும் கவலையளிகிறது, அதிகமானவர்கள் டாக்டரிடம் செல்வது மருந்து எடுக்க இல்லை மாற்றமாக தங்களது குழந்தைகளுக்கோ நமக்கோ எந்த ஒரு நோயும் இல்லை என்பதை டாக்டரின் வாயால் சொல்லணும் என்று தான் அதற்கான விலை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை.

 இப்படி அடிக்கடி மருந்து எடுக்க போவதற்கு அப்படி என்னதான் காரணம் என்று பார்த்தல் பல்வேறு விடையங்களை கூறலாம், * பெண்கள் ஒன்று சேரும் இடங்களில் அதிகம் கதைக்கபடுவது நோய்களை பற்றியும் அதற்கு தகுந்த டாக்டர் யார் என்பதை பற்றி தான் விவாதிகின்றனர். (நோய்க்கு பொருத்தமான டாக்டரை சொல்லும் பெண்களுக்கு தனி மரியாதையும் உண்டு)

 * அக்குரனை போன்ற ஊர்களில் பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஏற்பாடும் இல்லை இதனால் குடும்பத்துடன் சிறு சிறு பயணங்கள் போவதற்கு வாய்ப்புக்கள் ரொம்ப குறைவு அதனால் வீட்டில் பெண்கள் முடங்கி கிடக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உள்ளதால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியேறி வெளி உலகைப் பார்பதற்கு சிறந்த ஒரு வளி மருந்திற்கு செல்வது, காரணம் வேறு எங்கு போக வேண்டும் என்றாலும் கணவன்மாருக்கு முடியாது என்று சொல்லி நழுவி விடலாம் ஆனால் மருந்து என்றால் கண்டிப்பாக கூட்டிக்கொண்டு போகவேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.

 * ஒரு சிலர் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு செல்வதெற்கே பயப்படுவார்கள் காரணம் அங்கு சென்றால் தங்களது குழந்தைகளுக்கு ஏதாவது நோய் இருக்கு என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயம் தான் அதுவும் ஒருவகையில் உண்மை தான் காரணம் அடிகடி மருந்துக்கு செல்லும் ஒரு சிலர் டாக்டராகவே மாறி இருப்பார்கள் மற்றவர்களின் குழந்தைகளை ஆசையாக தூக்கி கொஞ்சி விட்டு உங்களது பிள்ளை ஏன் மூச்சு விட சிரமபடுகிறது? ஏன் கண் மஞ்சள் நிறமாக உள்ளது? மருந்து எடுத்தீங்களா? இதே போன்று ஒரு பிள்ளை மூச்சு விட கஷ்டப்பட்டதை சும்மா கண்டுகொள்ளாமல் விட்டதால் பிறகு ரொம்ப கஷ்டபட்டாங்க என்று அறிவுரை வேறு சொல்லி அனுப்புவார்கள், பிறகு என்ன அந்த இடத்தில் இருந்து நேரடியாக டாக்டரிடம் தான் போக வேண்டும்.

* ஆண்களுக்கு மத்தியில் இருப்பது மருந்து பழக்கம் கிடையாது மாற்றமாக ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது உடம்பை மெடிகல் செக்கப் பண்ண வேண்டும் என்று ஒரு எண்ணம், ஒரு சில மனிதர்களுக்கு அவர்களது உடம்பில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்று எப்போதாவது ஒரு சில நோய் கிருமிகள் உருவாகி மறையும் அக்கிருமிகளை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே அளித்து விடும், அப்படி நோய் ஏற்படும் சமயம் மெடிக்கல் செக்கப் பண்ணினால் அதோ கதி தான் நீங்கள் சாகும் வரை நோயாளிதான்.

 இப்படி பல்வேறு காரணங்களால் எமது ஊர்களில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனையும், பாமசிகளும் விடிய விடிய திறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை மறுக்க முடியாது, மூன்று மாத குழந்தைக்கு கூட பத்து வகையான மருந்து வகைகளை கட்டிகொடுக்கும் டாக்டர்களும் உள்ளனர் இவர்கள் உண்மையிலே டாக்டர்கள் தானா? அல்லது போலி டாக்டர்களா?

 அமெரிக்காவின் ஒரு ஆய்வின் படி உலகில் தயாராகும் மருந்து வகையில் 20% மருந்துகள் மாத்திரமே பாவிக்க படும் அதே நேரம் 80% மருந்துகள் குப்பைக்கு தான் போகின்றதாம், குப்பைக்கு போவது மருந்து மட்டும் இல்லை உங்களது கணவன்மார் வியர்வை சிந்தி உழைக்கும் பணமும் தான் என்பதை கொஞ்சம் சிந்தித்தாலே பாதி பிரச்சினை குறையும்.

நன்றி - ஸ்ரீலங்கா முஸ்லிம்.எல்கே.

Disqus Comments