Friday, March 20, 2015

பாகிஸ்தானை துவம்சம் செய்து அரை இறுதிக்கு முன்னேரியது அவுஸ்திரேலியா


உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3-வது காலிறுதி போட்டி அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இன்று இடையே அடிலைட்டில் நடைபெற்றது. 

நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் Misbah-ul-Haq முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். 

இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. 

பாகிஸ்தான் அணி சார்பாக Haris Sohail அதிகூடிய ஓட்டங்களாக 41 ஓட்டங்களையும் அணியின் தலைவர் Misbah-ul-Haq 34 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக Hazlewood 4 விக்கெட்டுக்களையும் Maxwell மற்றும் Starc ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர். 

இதன் அடிப்படையில் இன்றைய காலிறுதி போட்டியில் 214 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 33.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. 

அவுஸ்திரேலிய அணி சார்பாக SPD Smith 65 ஓட்டங்களையும் SR Watson ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களையும் பெற்றனர். 

இதன் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
Disqus Comments