முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம் நாட்டை நேசிப்பவா் என்றால் தற்பொழுது இடம்பெறும் வேலைத்திட்டங்களை குழப்பாமல் வீட்டோடு இருக்க வேண்டும் என காணி அமைச்சா் M.K.D.S.குணவா்த்தன தெரிவித்துள்ளார்
நேற்று அம்பாறையில் இடம்பறெ்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சுயமரியாதையுடயவா் மக்களால் நிராகரிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட பின்னா் மீண்டும் வர முயற்சிக்கக் கூடாதென அவா் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
