Wednesday, March 11, 2015

முஸ்லிம்களின் ஆலோசனைகளை வேண்டிநிற்கும் தேசிய சூரா சபை

*உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் அக்கறை மீதான பொதுமக்களின் ஆலோசனை பெறல்*

தேசிய இஸ்லாமிய அமைப்புகள் , துறைசார்  நிபுணார்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளார்களை உள்வாங்கிய தேசிய ஆலோசனை மன்றமான தேசிய சூரா சபை   “ உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் அக்கறை ”  மீதான பொதுமக்களின் கருத்துக்களை வேண்டி நிற்கிறது.

தேசிய மட்டத்தில், பிராந்திய மட்டத்தில், குறிப்பிட்ட இனக்குழுவை அடிப்படையாக கொண்ட அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபார்கள் குறித்த விடயம் தொடார்பாக பின்வரும் விடயப்பரப்புக்கு உட்பட்ட வகையில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்.

*  உத்தேசிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையின் சாதக பாதகங்கள்.

*  சிறுபான்மை இனம், சிறுபான்மை கட்சிகளுக்கான உரிய பிரதிநிதித்துவம்.

*  சிறுபான்மையினரின் அபிலாசைகளை உள்வாங்கும் வகையிலான தேசிய அரசியல் கட்சிகளை
பலப்படுத்தல்.

*  வீண்விரயம், சுரண்டல், ஊழல், முறைக்கேடுகள்  மற்றும் வன்முறைகளை குறைத்து பங்கேற்பு பிரதிநிதித்துவத்தின் தரத்தை மேம்படுத்தல்.

*  மக்களும், மக்கள் பிரதிநிதிகளும்: பொறுப்புக் கூறல் மற்றும் சகவாழ்வை நோக்கிய சாதக தன்மைகள்.

கருத்தக்கள், முன்மொழிவுகள் உள்ளடக்கிய எழுத்து மூலமாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை ( 200 – 300  சொற்களுக்கு கூடாமல்), கீழ்காணும் முறைகளினூடாக  16-03-2015  ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறல் வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் :   psc@nationalshoora.com  /  பெக்ஸ் மூலம் :  011 - _2678850_

மக்கள் கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் தேசிய சூரா சபை அரசியல் உப குழு பரீட்சித்து இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பாக அதனை முன்னெடுக்கும். 

மேலதிக தொடர்புகளுக்கு :  0766 270 470

Disqus Comments