புத்தளம் கல்பிட்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கல்பிட்டியில் இருந்து பலாவி நோக்கிச் சென்ற லொறியும் பாலாவியில் இருந்து கல்பிட்டிக்கு பயணித்த முச்சக்கரவண்டியும் நேற்றிரவு நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அதனை செலுத்தியவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி சாரதியை கைது செய்துள்ள கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

