ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அக்குழுவின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று சு.க.வின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எம்.ஆரியசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சீர்த்திருத்தி புதிய திட்டமிடலின் கீழ் செயற்படுத்துவதற்காகவே இந்த கொள்கை மற்றும் திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் இக்குழு ஆராயும் என்றும் எஸ்.எம்.ஆரியசேன மேலும் கூறினார்.
