Saturday, March 14, 2015

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் புதிய காந்தி சிலை

லண்டனின் நாடாளுமன்றச் சதுக்கத்தில் இந்தியப் பெருந்தலைவர் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலையொன்று 14ஆம் தேதி சனிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.

பிரிட்டிஷ் சாம்பிராஜ்ஜியத்தை எதிர்த்து போராடிய காந்தியின் சிலை, காந்தியை அந்நாளில் விரும்பியிராத முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டண்ட் சர்ச்சில் போன்றவர்களுக்கு இடையில் இடம்பெறப்போகிறது.
15 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாகச் சேர்ந்த கொடைத் தொகையைக் கொண்டு ஒன்பது அடி உயரமுள்ள இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சதுக்கத்தில் சிலை அமைக்க நிதி திரட்டிவந்த காந்தி நினைவுச் சிலை அறக்கட்டளையின் தலைரான லார்ட் மேக்நாத் தேசாய், இந்த சிலை அமையப்போகிற இடம் மிகவும் சிறப்புமிக்கது என்றும் காந்தி நேராக நாடாளுமன்றத்தைப் பார்த்தபடி நிற்கப்போகிறார் என்று கூறினார்.
இந்த சிலையை உருவாக்கிய சிற்பி ஃபிலிப் ஜாக்சன், காந்தி பற்றி நிறைய அறிந்திராதவர்கள் இந்த சிலையைப் பார்த்துவிட்டு அவரைப் பற்றியும், அகிம்சை வழியாக அவர் எட்டிய உயரங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்
பிரிட்டிஷ் சாம்பிராஜ்ஜியத்தை எதிர்த்த காந்தி, அந்த ஏகாதிபத்தியத்தின் தலைமையகமாக விளங்கிய லண்டனில் பிக்பெண் மணிக்கூண்டு கோபுரத்துக்கு மிக அருகில், அதுவும் நிஜத்தில் தன்னை விரும்பாத சர்ச்சிலுக்கு அருகில் சேர்ந்து நிற்கப்போகிறார் என்பது வேடிக்கைதான்.
Disqus Comments