(M.S. Muzaffir) துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைத் தம்வசம் வைத்துக் கொண்டிருந்த நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினைடுத்தே சந்தேக நபர் குளியாப்பிட்டி கணதுல்ல பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டின் தயாரிப்பிலான தன்னியக்கத் துப்பாக்கி ஒன்றே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் சிலவற்றையும் இதன் போது மீட்டுள்ளதாப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குளியாபிட்டி பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
