Saturday, March 21, 2015

22 கடவுச் சீட்டுக்கள் மற்றும் 8 அடையாள அட்டைகளுடன் முந்தலில் ஒருவா் கைது


பலரின் கடவுச் சீட்டுக்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளைத் தம் வசம் வைத்திருந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று பகல் உடப்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த பஸ்ஸில் வைத்தே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றினையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த முந்தல் பொலிஸார், கைது செய்யபட்ட சந்தேக நபரிடமிருந்து 22 கடவுச் சீட்டுக்கள், 8 தேசிய அடையாள அட்டைகளையும் மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொண்டுள்ள முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments