புத்தளம் பிரதேசங்களில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சுயதொழில் செய்வதற்கான வாழ்வாதார உபகரணங்களை வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் வழங்கி வருகின்றர். புத்தளம், முந்தல், கல்பிட்டி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்போருக்கே இவ்வாறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு கட்டமாக மேசன் தொழில் செய்வோருக்கும், கடற்றொழில் செய்வோர் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கும் வாழ்வாதார உபகரணங்கள் மாகாண சபை உறுப்பினரால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்குவதைப் படங்களில் காணலாம்.


