புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் முதலாவது வைத்திய பரிசோதனை முகாம், நேற்று வெள்ளிக்கிழமை காலை புத்தளம் சென் அன்றூஸ் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இதன் போது வைத்தியர்களும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும் மாணவர்களுக்கான பல்வேறு வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டனர்.




