Wednesday, June 10, 2015

வறுமைக்குப் பயந்து 15 வயதுக்குள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்.

சிறார் திருமணங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து வங்கதேச அரசு தான் முன்பு அளித்த கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹூமன் ரைட்ஸ் வாட்ச் கேட்டுள்ளது.
பெண்களுக்கான திருமண வயதை 18 வயதிலிருந்து 16 வயதாக குறைக்கும் முயற்சியை அரசு கைவிடவேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் 30 சதவீத பெண்களுக்கு 15 வயதுக்குள்ளேயே திருமணம் நடந்து விடுகிறது. இது சட்டவிரோதமாக இருந்தாலும் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன. பெண்களின் விருப்பத்தைப் பெறாமலேயே இந்தத் திருமணங்கள் நடக்கின்றன.
சிறார் திருமணங்களை வரும் 2041 ஆம் ஆண்டுக்குள் முற்றாக ஒழிக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.
வறுமை காரணமாக பல பெற்றோர்கள் இளம் பெண்களுக்கு மணம்முடித்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் சாப்பாட்டுச் செலவு குறையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
Disqus Comments