Sunday, June 21, 2015

பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு FREE WI-FI வழங்கத் தீா்மானம்.

(NFT) பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு இலவச Wi-Fi வசதிகளை வழங்குவதற்கு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ் சப்ரகமுவ மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே இலவச Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த முகவர் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
இதுதவிர, கொழும்பு சட்டக் கல்லூரிக்கும் இலவச Wi-Fi வசதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுதவிர, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் விரைவில் Wi-Fi வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கூறினார்.
இதுவரை நாடு முழுவதும் 142 இடங்களில் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Disqus Comments