இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 183 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 375 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
192 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சைத் தொடங்கியது.
வியாழக்கிழமை ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
3 ஆம் நாளான நேற்று சங்கக்கார 40 ஓட்டங்களுடனும், மெத்யூஸ் 39 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், 95 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 367 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், 112 ஓட்டங்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
எனவே, இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வியின் விளிம்பில் இருந்த இலங்கை அணி, தினேஷ் சந்திமாலின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியீட்டியது.
ரங்கன ஹேரத் 48 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக LD Chandimal அவா்கள் தோ்வு செய்யப்பட்டார்.