சீனாவானது அந்நாட்டில் பல தசாப்த காலமாக நடைமுறையிலிருந்த குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்ற கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகமான ஸின்ஹுவா செய்திச் சேவை தெரிவிக்கிறது.
பொதுவுடைமை கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தற்போது தம்பதியினருக்கு தலா இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.
குடும்பத்துக்கு ஒரு குழந்தையென்ற சர்ச்சைக்குரிய கொள்கை 1979 ஆம் ஆண்டில் சனத்தொகை வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தக் கொள்கை காரணமாக சுமார் 400 மில்லியன் பிறப்புகள் இடம்பெறுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் மொத்த சனத்தொகையில் இளைஞர்களின் தொகை வீழ்ச்சி கண்டு வயோதிபர்களின் தொகை அதிகரித்ததையடுத்து அந்தக் கொள்கையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்நாடு தற்போது தள்ளப்பட்டுள்ளது.
தற்போது சீனாவின் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினராக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். அந்நாட்டின் மொத்த சனத்தொகை 1.36 பில்லியனாகும்.