Saturday, November 7, 2015

கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 4 மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால், மண்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து வீழக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
ஆகவே இந்த நிலைமை குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுள்ளது.

Disqus Comments