Monday, March 28, 2016

விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்தது 120 பயணிகள் பத்திரமாக மீட்பு

(தினத்தந்தி) மும்பை, ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அதில் 120 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரை இறங்கியது. ஓடு பாதையில் விமானம் வேகமாக சென்ற போது அதன் டயர் திடீர் ஒன்று வெடித்தது. உடனே விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார்கள்


இதனால் 120 பயணிகள் உயிர் தப்பினர். உடனே மீட்பு குழுவினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து 120 பயணிகளையும் அவசர வழி வழியாக மீட்டனர். 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 
Disqus Comments