Wednesday, March 23, 2016

கலாச்சார சீரழிவை நோக்கி தென்கிழக்கு பல்கலைக்கழகம் (கடிதம்)

கலாச்சார  சீரழிவின் உச்சம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் 
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரும்பெரும் சொத்தாக அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் கருதப்படுகின்றது. மறைந்த தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது இலட்சியக் கனவின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட நோக்கம் மறந்து மார்க்க வரம்புகள் மீறிய இன்றைய சந்ததியின் கேளிக்கைக்குரிய வங்குரோத்து கலாச்சாரங்களை அரங்கேற்றும் பிறப்பிடமாக மாறிப்போயுள்ளது.
இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் பெரும்பான்மையாக கல்வி பயிலும் இந்த பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. மார்க்கம்ää கலாச்சாரம்ää மற்றும் பாரம்பரியம் போன்ற அனைத்து பகுதிகளிலும் அந்நிய மதத்தினரை விடவும் கேவலமாக தனது செயற்பாடுகளை செவ்வனே அரங்கேற்றி வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் கலாச்சார விடயங்களையும் ஒருங்கே வெளிவுலகுக்கு காண்பிக்க வேண்டிய இப்பல்கலைகழக மாணவ சமூகம் அந்நிய மத கலாச்சாரங்களின் தரகர்களாக செயற்படுகின்றது. குறிப்பாக  ஒரு சில மார்க்க துரோகிகளின் வழிகாட்டலின் பேரிலே இந்த அசிங்கங்கள் மேடையேற்றப்படுகின்றன.
மார்க்க விழுமியங்கள் மறந்த உலக கல்வி பிரயோசனமற்றது என அவர்களின் குறுகிய சிந்தனைக்கு உறைக்கவில்லை போலும். கலாச்சார சீரழிவின் ஒருகட்டமாக கடந்த வியாழக்கிழமை 17.03.2016 அன்று உபவேந்தரின் அனுமதியுடன் இரவு நேரத்தில் முஸ்லிம் மாணவிகள் விடுதி இரவு (ர்ழளவநட Niபாவ) என்ற பெயரில் மாபெரும் கச்சேரிääகளியாட்ட மற்றும் நடன  நிகழ்வுகளை அரங்கேற்றினர். இது மாலை 7 மணி தொடக்கம் அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. 
இந்த கேவலாமான அசிங்கம் அரங்கேற முழு சிரத்தையும் எடுத்தவர்கள் எமது சமூகத்தின் வாரிசுகளான மாணவ மாணவியருள்  ஒருசிலரே. ஒழுக்கம் வெட்கம் போன்றவற்றை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய பரம்பரையில் பிறந்து வளர்ந்து எதிர்கால சந்ததியினருக்கு படிப்பினையாகவும் முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டிய இந்த சமூகம் இவ்வாறான கேவலமான செயல்களில் ஈடுபட யார் காரணம். பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட இதற்கான அனுமதி யார் யாரிடமிருந்து பெறப்பட்டதோ அவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் இறைவன் முன்னாள் குற்றவாளியாக மறுமையில் கை கட்டி நிற்ப்பீர்கள் என்பது திண்ணம்.
இது இவ்வாறிருக்க அனுமதின்றியும் விரிவுரையாளர்களின் துணையின்றியும் சுற்றுலாக்கள் சென்று நான்கு ஐந்து தினங்கள் சென்று மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்புகிறார்கள். மிகுந்த பாதுகாப்புடன் பிள்ளைகள் கல்வி பயில்கிறார்கள் என்று தத்தம் வீடுகளில் பெற்றோர்கள் எண்ணிக்கொண்டு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் எவ்வளவு தூரம் தனது மார்க்கத்திற்கும் பெற்றோருக்கும் மற்றும் கர்ப்பிற்கும் உண்மையாக இருக்கின்றார்கள் என்றால் அந்த வினாவுக்கு விடையானது மௌனமாகவே இருக்கும்.
தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது இவ்வாறான விடயங்களில் கரிசனையற்றுக் காணப்படுகின்றது. முஸ்லிம் மாணவ சமூகத்தை ஒரு ககுடையின் கீழ் ஒன்று திரட்டும் ஒரு அமைப்பாகவே இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் மஜ்லிஸ்கள் காணப்படுகின்றன. இருந்தும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மஜ்லிஸானது இவற்றிலிருந்து முற்றாக வேறுபட்டத்தாக காணப்படுகின்றது. பெரும்பான்மை முஸ்லிம் மாணவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மஜ்லிஸானது இவ்வாறான ஒழுக்க மார்க்க வரையறைகள் மீறிய செயல்களை கணக்கில் கொள்ளாதது ஏன்? உபவேந்தரின் ஒத்துழைப்பு முஸ்லிம் மஜ்லிஸிற்கு இல்லாமையா? அல்லது பல்கலைக்கழக விரிவுரையாளர் சமூகம் மற்றும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ சமூகத்தின் ஒத்துழைப்பு இன்மையா?
இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவ சமூகம் இவ்வாறன வழிகேட்டில் செல்ல பெற்றோர்கள்ää உபவேந்தர்ää பல்கலைக்கழக விரிவுரையாளர் சமூகம்ää மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் அனைவரும் இறைவனிடம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளனர் என்பதை அடிக்கடி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் மா நபியின் வழித்தோன்றல்கள் மீண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் முஸ்லிம்கள்.

Disqus Comments