Wednesday, March 30, 2016

அட ஜனாதிபதி மைத்ரி இப்படிப்பட்டவரா - அம்பலமான ரகசியம்

(IM) அரசனாக செயற்பட தாம் தயார் இல்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தின் 33வது வருடாந்த பொதுக் கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (29) முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்

நான் அமைச்சராக இருந்த காலத்திலும் ஜனாதிபதியாக ஆகிய பின்னரும், எனது மனைவி வீட்டில் இருந்து வாழை இலையில் சுற்றிக்கொடுக்கும் சோற்று பொதியையே நான் மதிய உணவாக உண்கிறேன். 

இதனை நான் முன்னர் யாருக்கும் சொன்னது கிடையாது என நினைக்கின்றேன். 

நான் உண்ணும் போது இங்கு வந்த என் நண்பர்கள் மூலம் இது வெளியே சென்றிருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதற்கு ஒரு தேரர் சொல்லியிருக்கிறார் அரசன் அரசனாக உண்ண வேண்டும். 

ஜனாதிபதி, ஜனாதிபதியாக உண்ணவேண்டும். 

ஜனாதிபதி கிராம சேவகரை போல் உண்டு பயனில்லை. 

அதனால் ஜனாதிபதியின் வசதி வாய்ப்புகளை இவருக்கு அனுபவிக்க தெரியாது என்று கூறியிருந்தார். 

அதாவது அரசன் உண்டதை போல் என்னையும் உண்ணச் சொல்கிறார். அப்படி உண்ண என்னால் முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Disqus Comments