கிளிநொச்சி பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சந்தேகநபரான அதிபர் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேகநபரான அதிபர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குறித்த மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
