Monday, March 28, 2016

றிஷாத் பத்தியுத்தீன் தலைமையில் மன்னாரில் வீட்டுத்திட்டம் திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, மேமன் சமூகத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கிராமத்தின், இரண்டாம் கட்ட வேலைகள் இன்று காலை (28/03/2016) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில், முன்னாள் பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா, அமீன் பைலா மற்றும் மேமன் சமூக முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
அந்த கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலையும் விருந்தினர்கள் திறந்துவைத்தனர்.


(Rishad Media)
Disqus Comments