Tuesday, March 29, 2016

கடத்தப்பட்ட எகிப்து விமானம் சைப்பிரஸில் தரையிறங்கியது.

எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேற்படி விமானத்தில் 80க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும், அதில் ஒருவர் ஆயுதங்களுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் , விமானச் சிப்பந்தியாளர்கள் குழுவையும் நான்கு வெளிநாட்டவரையும் தவிர மற்றைய பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Disqus Comments