அடுத்து (2017) வருடம் தொடக்கம் பல்கலைக்கழங்களில் 27 புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் உணவு மற்றும் வர்த்தக முகாமைத்துவ பாடநெறி சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பிப்பதற்கான பட்டப்படிப்பு களனிப் பல்கலைக்கழகத்திலும், கடல்சார் பட்டப்படிப்பு கற்கை நெறியொன்று ருஹுண பல்கலைக்கழகத்திலும் தொடங்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக தொழில்நுட்ப பிரிவுகளில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்காக 24 புதிய பாடநெறிகள் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் புதிய பாடநெறிகளுக்கான மாணவர்களை அனுமதிக்கும் நோக்கில் கடந்த வருடத்தை விட பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையை பத்துவீதத்தால் அதிகரிக்கவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும் இந்த மாதத்திற்குள்ளாக அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் பத்திரங்கள் கோரப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.