Monday, April 18, 2016

புத்தளம் - ஆனமடுவவில் 6 அடி நீளமுடைய முதலை ஒன்று வனவிங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது.

புத்தளம் – ஆனமடு – மஹாஉஷ்வெப் பகுதியில் சுமார் 6 அடி நீளமுடைய முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
மஹாஉஷ்வெப் பகுதியில் தோண்டப்பட்டிருந்த குழியில் இருந்து நேற்று மாலை இந்த முதலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு மக்கள் தெரியப்படுத்தினர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள், முதலையை பிடித்து இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Disqus Comments