~ அ(z)ஸ்ஹான் ஹனீபா ~
நைட்டிகளாக மாறும் ஹபாயாக்கள்
அணிந்தும் அணியாத நிர்வாண நிலை ...
விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் விருந்தாகும் அவலம் அரங்கேறும் நவீன உலகம் ..
சொந்த தாய் , மகள் , சகோதரி ,மனைவி நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது உறுதுணையாக இருக்கும் அனைத்து தந்தை , கணவன் , மகன் , சகோதரன் போன்றோர் மறுமையில் தப்பவே முடியாது .
வீட்டில் உள்ளவர்களைத் தடுக்காத இவர்கள் ஆண்கள் என்று வீராப்பு பேசுவதற்கு அருகதை உள்ளவர்களா ?
ஊரில் இவ்வாறான மெல்லிய , இருக்கமான நைட்டி போன்ற ஹபாயாக்களை விற்பனை செய்வோர் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விபச்சாரர்கள் என்ற குற்றத்திற்கு ஆளாகின்றனர் என்பதே உண்மை .
விற்பனையாளர்களே நீங்கள் இவ்வாறான கேவலம் கெட்ட ஹபாயாக்களை உங்களது சொந்த குமரிகளுக்கு அணிவித்து அழகு தான் பாருங்களேன் . நீங்கள் உங்ளது பிள்ளைகளுக்கு விரும்பாததை ஏன் வியாபாரம் என்ற பெயரில் மற்றவர்களின் உடல் அங்கங்களை உலகிற்கு காட்சிப் படுத்துகிறீர்கள் .
வினயமாக கேட்பது யாதெனில் , பெற்றோர்கள் இது குறித்து கூடிய கரிசனை செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும் . மார்க்கம் உதறித்தள்ளப்பட்டு அந்நிய சக்திகள் ஊடுருவி எமது வாலிப சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன .
நபியவர்கள் கூறியது போல் " ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே அவர்களது பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவார்கள்."
இவை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட ஹபாயாக்களா ?
மக்களாகிய நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் .
வல்லாஹி , இஸ்லாத்தின் எதிரிகள் சிறப்பாக திட்டம் தீட்டி முஸ்லிம்களை நாசத்திற்குக் கொண்டு செல்கின்றார்கள் .
இவற்றை அணிவதை விட அணியாமல் பிறந்த மேனியாக போவது மேல் ; ஏனெனில் இரண்டும் ஒரு நிலையாகத் தான் இங்கு விளங்குகிறது .
இதனை விற்போர் , கொள்வனவு செய்வோர் , தமது மனைவி பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்போர் , அத்தோடு இவற்றை அணிந்து வெளியில் சென்று ஆண்களை பாவத்தின் பால் ஈர்ப்போர் அனைவருக்கும் விபச்சாரக் குற்றம் வந்தே தீரும் .
ஆடை அணிவது உடலை மறைப்பதற்கு , ஆனால் இன்று ஆடை வெறும் உடலில் இருக்கும் தோல் போன்று ஒட்டியதாகவும் , மெல்லியதாகவும் இருக்கமாகவும் இருக்கின்றது . கேட்டால் fashion ஆம் .
உண்மையில் விபச்சாரம் பல வழிகளில் எம்மை அறியாமலே சமூகத்தில் ஊடுருவுகின்றது .
எனவே பொறுப்புதாரிகளே ! தயவுசெய்து சமூகத்திற்கு விளிப்பூட்டுவது உங்களது சொந்த பந்தங்கள் அனைவரையும் இந்த கேவலமான கேடுகெட்ட அனாச்சாரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் .
வல்ல அல்லாஹ் இந்த அனாச்சாரத்திலிருந்து எமது முஸ்லிம் பெண்மணிகளைக் காத்தருள்வானாக .
எனவே எல்லோரும் இவ்விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கேடுகெட்ட ஆடைப் பழக்கங்களிலிருந்து எம் இளம் பெண்களையும் , வாலிபர்களையும் பாதுகாப்போம் .
நட்புடன்
Azhan Haneefa
ஹுஸைனியா புரம் - பாலாவி
