அண்மைக் காலமாக எமது சமூகத்திற்கு மத்தியில் பெண்கள் தற்கொலை செய்துவரும் விடயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது! (தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கின்றனர்).
அது திருமணம் முடித்த பெண்களாக இருந்தால் “குடும்பப் பிரச்சினையாகவும்” திருமணம் முடிக்காத பெண்களாக இருந்தால் மன அழுத்தமும், காதல் மோகங்களுமாகவே விசாரனையின் போது தெரிய வருகின்றது. ஆகவே இது இறையச்சம் இல்லாத கரணத்தினாலே இவ்வாறான நிலை ஏற்படுகின்றது.
இச்செயல் மார்க்கத்தில் முற்றிலும் முறனானதாகும். ஆகவே இதனைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு குடும்ப தலைவனும், தலைவியும் தத்தமது வீடுகளில் தற்கொலை சம்பந்தமாக இவ்விடயத்தை அறிவுறுத்தி எமது சமூகத்தின் மத்தியில் தற்கொலைகளைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் வேண்டுகின்றேன்.
அத்தோடு தற்கொலைகள் அனைத்தும் சட்டத்தின் பிரகாரம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் (Postmortem) செய்யப்படும் என்பதைக் கருத்திற்கொள்ளவும்.
இவ்வண்ணம்
அல் ஹாஜ் B.M. ஹிஷாம்
(பு/ கற்பிட்டி திடீர் மரண விசாரனை அதிகாரி.)
அல் ஹாஜ் B.M. ஹிஷாம்
(பு/ கற்பிட்டி திடீர் மரண விசாரனை அதிகாரி.)
WAK