Wednesday, April 27, 2016

இளைஞர்களே முன்னெச்சரிக்கை ! நீங்களும் பாதிக்கப்படலாம் இன்றே விரையுங்கள்

புகை, மது, இலத்திரணியல் சாதனங்களின் பயன்பாடு, கதிர்வீச்சுகள், உணவுமுறையில் மாற்றம், உணவுப் பொருட்களில் இரசாயனங்களின் கலப்பு போன்ற காரணங்களால் ஆண்களின் ஆண்மை தன்மை  குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
பொதுவாகவே, பெண்களை பருவமெய்துவதை போல, ஆண்களுக்கும் 15 வயது காலகட்டத்தில் விந்தணு உற்பத்தி ஆரம்பித்துவிடும் இது ஓரிரு ஆண்டுகளில், அதாவது 18 வயதை நெருங்கும் போது, நல்ல சக்தியுள்ள வலுமையான விந்து உற்பத்தி ஆக ஆரம்பிக்கும்.
இந்த காலக்கட்டத்தில் உற்பத்தியாகும் விந்தினை சேமித்து வைக்க கூறுகின்றனர் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்….
உலகளவில் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது, இதோடு இது நிற்காமல் பெரும்பாலானோருக்கு மனநில பதிப்புகள், மன அழுத்தம் போன்றவை எழ காரணமாக இருக்கிறதாம்.
நாம் மேற்கூறிய பல காரணங்களினால் ஆண்களின் விந்தணு திறன் மிக விரைவாக குறைந்துவிடுகிறது என கூறப்படுகிறது. இதனால், அவரவர் விந்தினை சேமித்து வைத்தாலே இதற்கான நல்ல தீர்வுக் காண முடியும் என்றும் கூறுகின்றனர்.
இப்போதே பல நாடுகளில் இரத்த வங்கியை போல, விந்தணு சேமிப்பு வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விந்தணு குறைபாடு உள்ளவர்கள் குழந்தை பேரு அடைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். வரும் நாட்களில் இந்த பிரச்சனை உலகில் மிகவும் பெரிதாக வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக ஆண்கள் மத்தியில் இதைப் பற்றிய தன்னார்வம் அதிகரிக்க வேண்டும். முக்கியமாக 18-24 வயதுடைய ஆண்கள் அவர்களது விந்தணுவை சேமிப்பது மிக அவசியம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் ஆண்களின் விந்து நல்ல திறனுடன் இருக்கும்.
தாமதமாக திருமணம் செய்பவர்களோ அல்லது தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கோ இது நல்ல தீர்வளிக்கும். ஏனெனில், பெரும்பாலும் தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பலருக்கு தந்தை ஆகும் கொடுப்பினை அமைவதில்லை. அதற்கு காரணம் அவர்களது விந்து அதற்குள் திறன் குறைந்துவிடுகிறது.
பெண்களுக்கு அவர்களது கரு வலுவின்றி அல்லது கருப்பை வலுவின்றி இருந்தால் வேறொரு பெண்ணின் கருவோடு விந்தணுவை இணைத்து கருத்தரிக்க செய்தது, வாடகை தாய் போன்றவற்றை போல தான் இதுவும். ஆண்களுக்கு புதிது என்பதால் சிலர் இதை ஏற்க மறுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments