Monday, April 25, 2016

முகநூல் LIKES படுத்தும்பாடு. LIKE பிரியா்களுக்கு...


~ அ(z)ஸ்ஹான் ஹனீபா ~  
வினைத்திறனுள்ள ஆக்கபூர்வமான  ஆக்கங்கள் பெறாத like களை சாதாரண photo க்கள் பெற்றுவிடுகின்றன .  
மொக்க பொடோஸ்களுக்கு இருக்கும் அங்கீகாரத்தின் அளவு கூட உண்மையான பதிவுகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை .

இவற்றிலிருந்து சமூகம் எந்தளவு வாசிப்பில் பின்னடைந்திருக்கின்றது என்பது வெட்ட வெளிச்சமாகின்றது . வாசிப்பு என்றால் சோம்பேறித்தனம் இன்றைய இளம் சமுதாயத்தினரை ஆக்கிரமித்து விடுகின்றது . எதற்கெல்லாம் like செய்வது கூட அறியாத ஒரு சில ஜீவன்கள் கண்டது காணாதது , நல்லது கெட்டது , இல்லாதது பொல்லாதது என பாகுபாடின்றி பிரித்தறியும் பகுத்தறிவின்றி அங்கலாய்வதை அவதானிக்கின்ற பொழுது அடக்க முடியாத சிரிப்புத் தான் வருகின்றது .

Short & sweets என்பதே தற்கால மரபாக மாறிச் சென்றுகொண்டிருப்பதை உணர முடிகின்றது . போலிக்கு இருக்கும் கிராக்கி உண்மைக்கு இருப்பது என்பது அரிதிலும் அரிதாகக் காணப்படுகின்றது . ஆதாரமற்ற , ஊர்ஜிதமற்ற பதிவுகள் , செய்திகள் , தகவல்கள் , தரவுகள் , படங்கள் என்பனவற்றை கண்மூடித்தனமாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயம் இருக்கும் வரை போலி சாமியார்களும் , போலி ஜின் வைத்தியர்களும் , மாய வித்தைக்காரர்களும் மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நாடத்திக் கொண்டிருப்பர் !!! 

மேற்குறித்த மூடநம்பிக்கைகள் சமூக மட்டத்திலும், சமூக வளைத்தளங்களிலும் கணிசமான அளவு like களைப் பெற்றிருக்கின்றன . 
Like செய்வது என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து அமைகின்றது . எனினும் ஒருவர் நல்லவரா தீயவரா என்பது கூட சில வேளைகளில் இந்த like களை வைத்தும் கணிப்பிடப்படுகின்றது எனில் like கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன எனலாம் .

எனவே like செய்வதில் மிகவும் உன்னிப்பாகவும் அவதானமாகவும் இருப்பது நல்வழியில் செல்லும் அனைவரினதும் கடமையாகும். சிறந்ததை தெரிவு செய்வதில் சீரான நேரிய வழிமுறையைக் கடிப்பிடித்தி சிறந்த மனிதமுள்ள மனிதர்களாக வாழ்வதற்கு முயற்சிப்போம் .

நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா 
ஹுஸைனியா புரம் - பாலாவி
Disqus Comments