Sunday, April 24, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 11 இலங்கையின் பாடசாலைக் கல்வி

இலங்கையின் பாடசாலைக் கல்வி
·        சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமை்ச்சர் – E.A. நுகாவெல
·        கட்டாயக் கல்வி வயதெல்லை.
·        அடிப்படைக் கல்விக்காகவும், சமயக் கல்விக்காகவும் போர்த்துக் கேயா்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் மிஷனரிப் பாடசாலைகள் எனப்படுகின்றன.
·        தற்போது நடைமுறையில்உள்ள கல்விச் சட்டம் 1939ம் ஆண்டிண் 31ம் இலக்க கல்விச் சட்டம் ஆகும்.
·        இலவசக் கல்வி 1945ம் ஆண்டு C.W.W. கன்னங்கரவினால் அறிமுகம் செய்யப்பட்டது.
·        பாடசாலைக் கல்வியின் சுயமொழிகள் போதனைமொழிகளாக 1956ம்  ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.
·        பாடசாலை நேரங்களில் மாணவா்களுக்கு விசுக்கோத்து வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
·        1993 முதல் இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. என்றாலும் 2016ம் ஆண்டு முதல் சீருடையின் பெறுமதிக்கமைய வவுச்சா்கள் வழங்கப்படுகின்றன.
·        1998 உயா் தரப் பரிட்சையில் பாடங்களின் எண்ணிக்கை 4 யிலிருந்து 3 ஆக குறைக்கப்பட்டது.
·        பாடசாலைக் கல்வியமைச்சு 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது
·        5E முறைமை என்றால் என்ன? 2007ம் ஆண்டு கற்றல் முறைமைகளை இலகு படுத்த உருவாக்கப்பட்டது. EXCITE(தூண்டல்), Explore(கண்டறிதல்), Explain(விளக்குதல்), Expand(விரிவுபடுத்தல்), Examine(பரீட்சித்தால்)
·        கல்வி வெளியீட்டு ஆணையாளா் – திஸ்ஸ ஹேவா விதான.
·        பரீட்சை ஆணையாளா் நாயகம். – எம்.ஜே.என். புஷ்பகுமார
·        சாதாரண தரப் பரீட்சையில் தோற்றக் கூடிய ஒரு பரீட்சாத்தி தோற்றக் கூடிய அதிகபட்ட பாடங்களின் எண்ணிக்கை – 09 ஆகும்
·        கல்விச் சேவையின் பிரிவுகள்
1.     கல்வி நிர்வாக சேவை
2.     ஆசிரியா் கல்வியியலாளா் சேவை
3.     அதிபா் சேவை
4.     ஆசிரியா் சேவை
·        சார்க்  வலயத்தில் உள்ள நாடுகளுக்கிடையில் தேசிய உற்பத்தியில் அதிகளவு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கியுள்ள நாடு இலங்கையாகும்.
·        இலங்கை ஆசிரியா் சேவை தாபிக்கப்பட்டது 1994ம் ஆண்டு ஆகும்.
·        ஆசிரியா் சேவை தரங்கள் – 3ii, 3i, 2ii, 2i, 1.
·        சாதாதரண தரத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 6 பாடங்கள்
1.     தாய்மொழி
2.     கணிதம்
3.     ஆங்கிலம்
4.     விஞ்ஞானம்
5.     சமயம்
6.     வரலாறு
·        உயா் தரத்தில் மாணவா்கள் தோற்றக் கூடிய விருப்புக் பாடங்களின் எண்ணிக்கை – 3
·        இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய நாடு – நெதா்லாந்து.
·        இலங்கை கல்வி நிர்வாக அமைப்பின் 6 கூறுகள்
1.     கல்வியமைச்சு
2.     மாகாண கல்வியமைச்சு
3.     மாகாண கல்வித் திணைக்களம்
4.     வலயக் கல்வி அலுவலகம்
5.     கோட்டக் கல்வி அலுவலகம்
6.     பாடசாலை
·        இலவசக் கல்வியென்பது – தரம் 1 முதல் பல்கலைக்கழகம் வரை வழங்கப்படும் கல்வியாகும்.
·        தேசியப் பரீட்சைகளை நடாத்தும் நிறுவனம் – இலங்கை பரீட்சைத் திணைக்களம்
·        கல்விக் கொள்கைகளை வகுக்கும் நிறுவனம் – தேசிய கல்வி ஆணைக்குழு
·        பாடத்திட்டங்களை வகுக்கும் நிறுவனம் – தேசிய கல்வி நிறுவகம்
·        இலங்கையில் இஸ்லாமிய கல்வியின் முன்னோடி – எம்.சி. சித்திலெப்பை
·        இலங்கையில் கல்வியை விரிவுபடுத்து கடந்த சில ஆண்டுகளாக உதவி வழங்கி வரும் நிறுவனம் – உலகவங்கி

இலங்கையில்  உள்ள அரச பாடசாலைகள் ஒரே பார்வையில் - 2013

இலங்கையில்  உள்ள அரச பாடசாலைகள் உள்ள ஆசிரியா்கள் பார்வையில் - 2013

மாகாண அடிப்படையில் இலங்கையில்  உள்ள அரச பாடசாலைகள் ஒரே பார்வையில் - 2013

இன அடிப்படையில் இலங்கையில்  உள்ள அரச பாடசாலைகள் ஒரே பார்வையில் - 2013


மேலதிக் தகவல் தேவைப்படும் அன்பா்கள் 
  • இலங்கை கல்வியமைச்சின் http://www.moe.gov.lk/ இணையத் தளத்தையும்,
  • இலங்கை புள்ளி விபரத் திணைக்களத்தின் http://www.statistics.gov.lk/ என்ற இணையத் தளத்தின் 

உதவியை நாட முடியும்.
·         
Disqus Comments